Mai 20, 2024

நரித் தந்திரம் வென்றது – ரணில் மீண்டும் வருகிறார்

இந்த நாட்டில் இனப்பிரச்சினையை ஆயுதப் போராட்டமாக மாற்றி தமிழ் மக்களையும் சிறுபான்மை மக்களியும் ஒடுக்கிய கட்சி எதுவெனக் கேட்டால் பால் குடிக்கும் சிறுபிள்ளைகூட “ஐக்கிய தேசியக் கட்சி” என்று கூறிவிடும்.

அந்தளவுக்கு முகவும் மோசமான இனவாதிகளை கொண்ட கட்சியாக, தமிழர்களின் புகழ் பூத்த நூலகத்தை எரித்த, 83 ஜூலைக் கலவரத்தை உருவாக்கிய, தமிழ் இளைஞர்களின் கைகளின் ஆயுதங்களை திணித்து தமிழர்களை தனிநாடு கோர தள்ளிய, 2000ம் ஆண்டில் சந்திரிக்கா முன்வைத்த நியாயமான அரசியல் தீர்வை நாடாளுமன்றத்தில் வைத்து ரணில் தலைமையில் தீயிட்டுக் கொழுத்திய ஐக்கிய தேசியக் கட்சி இந்த நாட்டு மக்களால் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தூக்கியெறியப் பட்டது.

இலங்கை முழுவதும் போட்டியிட்டு ஒரு ஆசனத்தைக் கூட கைப்பற்ற முடியாமல் போய், தேசியப் பட்டியல் ஆசனத்தை மட்டுமே பெற்றுக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி, அந்த ஆசனத்துக்கு யாரை நியமிப்பதுனென்று கடந்த 8 மாதங்களாக புடுங்குப்பட்டுக்கொண்டு இருந்தது.

ஜோண் அமரதுங்க, அகிலவிராஜ், வஜிர அபேவர்த்தன போன்ற கடையின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தமக்கு அந்த தேசியப் பட்டியல் ஆசனத்தை வழங்கும்படி கட்சிக்குள் சண்சையிட்டுக் கொண்டிருந்தனர். ஆனாலும் நரித் தந்திரத்தில் பெயர்போன ரணில் மீண்டும் கட்சிக்குள் நரிவேலை செய்து தேசியப் பட்டியலில் மீண்டும் நாடாளுமன்றம் வரவுள்ளமையை வஜிர அபேவர்த்தன நேற்று ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தினார்.

இனி நரி தனது பிரித்தாளும் வேலையை நாடாளுமன்றி செய்து நாட்டை மீண்டும் குட்டிச்சுவராக முயற்சிக்கும்.