Oktober 6, 2024

கூட்டமைப்பும் கூடாது:மக்களிற்கும் அனுமதியில்லை

கொரோனா தொற்று காரணமாக, மறு அறிவித்தல் வரை, நாடாளுமன்றத்தின் பொதுமக்கள் பார்வையாளர் பகுதியை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கமையவே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதென்றும் , மீண்டும் அதனை திறக்கும் திகதி குறித்து அறிவிக்கப்படும் என்றும் நாடாளுமன்ற தகவல்கள் தெரிவித்துள்ளன.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனுக்கு சுகவீனம் ஏற்பட்டுள்ளமையால் எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுக்குப்பின்னர் கூடவிருந்த நாடாளுமன்றக் குழுக்கூடாதெனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தெரிவில் பிரச்சினைகள் ஏற்படாது என்றார்.

கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர், கொறடா பதவிகள் தொடர்பில், நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுமென அறிவிக்கப்பட்டது. இந்நிலையிலேயே மேற்படி விவகாரம் தொடர்பில் அவரிடம் கேட்டபோதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.