Oktober 6, 2024

குறைந்த வயதில் நாமலின் கைகளுக்கு கிடைத்த அதிகாரங்கள்!

குறைந்த வயதில் நாமலின் கைகளுக்கு கிடைத்த அதிகாரங்கள்!

புதிய அமைச்சரவையில் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷவின் ஆதிக்க வரம்பின் 07 கீழ் அரசு நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதன்படி விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், தேசிய இளைஞர் படையணி, இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் கூட்டுறவு நிறுவனம், தலைமைத்துவ அபிவிருத்திக்கான தேசிய நிலையம் மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களம், ஸ்மார்ட் ஸ்ரீலங்கா நிறுவனம் ஆகிய நிறுவனங்களே நாமல் ராஜபக்ஷவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

இலங்கையின் அமைச்சரவை வரலாற்றில் மிக குறைந்த வயதில் அமைச்சரவை அமைச்சர்களில் ஒருவராக நாமல் ராஜபக்ஷ திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.