September 11, 2024

முற்றவெளிக்கு வந்த வள்ளிபுனம்: நையாண்டி சிவாஜி?

வள்ளிபுனத்து நினைவேந்தலை சிலர் இப்போது யாழ்ப்பாணம் முற்றவெளிக்கு கொண்டு வந்துள்ளார்கள். உண்மையில் அவ்வளவு

கோழைத்தனமாகவா தமிழ் தலைமைகள் செல்கின்றன என கேள்வி எழுப்பியுள்ளார் க.சிவாஜிலிங்கம் .யாழ்.ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு படுகொலை தூபியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் செஞ்சோலை படுகொலையினை நினைவுகூர்ந்தமையினையே இவ்வாறு நையாண்டி செய்துள்ளார் க.சிவாஜிலிங்கம்.

அக்கட்சியின் செயலாளர் தலைமையில் ஒரு சில சிட்டிகளுடன் மூடப்பட்ட நினைவேந்தல் தூபி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வையே அவர் கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.

இது பற்றி விபரித்த உள்ளுர் வாசியொருவர் இன்று செஞ்சோலை படுகொலையின் 14 ஆண்டு நினைவேந்தல் வள்ளிபுனம் பகுதியில் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. ஆனால் பொலிஸார் தடை விதித்தார்கள். ஏற்பாட்டாளர்கள் சிலரை அழைத்து கைது செய்வோம் என எச்சரிக்கை செய்தார்கள்.இதனால் கடந்த சில வருடங்களாக நினைவு நிகழ்வு இடம்பெறும் இடைக்கட்டு சந்தி செஞ்சோலை படுகொலை வளைவு அமைந்துள்ள இடத்தில் யாரும் அஞ்சலி செய்யவில்லை. அந்த இடம் பொலிஸாராலும் இராணுவத்தினராலும் புலனாய்வாளர்களாலும் நிறைந்து இருந்தது .

சற்று நேரத்தில் ஒரு வாடகை வான் வந்தது அதிலிருந்து சிவாஜிலிங்கம் ஒரு வாழைக்குற்றியுடனும் சில இளைஞர்கள் கொல்லப்பட்ட மாணவிகளின் படங்களை தாங்கிய பதாதைகளுடனும் இறங்கினார்கள் . பொலிஸார் நிகழ்வை நாடாத்த விடாது தடுத்த இடத்தை நோக்கி சிவாஜிலிங்கம் சென்றார் வாழை குற்றியை நாட்டி விட்டு மண் சட்டியை மேலே வைத்து விட்டு விளக்கேற்ற தயாரானார் பொலிஸார் , புலனாய்வாளர்கள் சூழ்ந்து கொண்டனர் நிகழ்வை செய்ய முடியாது இதிலே என்றனர். இதில் தான் நாம் கடந்த வருடங்களாக நினைவேந்தல் செய்கின்றோம் இதில்தான் நினைவு வளைவு உள்ளது இறந்த எனது உறவுகளை நினைவுகொள்வதை தடுக்கும் உரித்து உங்களுக்கு கிடையாது உயிர் நீர்த்த உறவுகளை நினைவில் கொள்ளும் உரிமைய விட்டுக்கொடுக்க முடியாது என்று கூறி தீபம் ஏற்றினார்.

இராணுவத்துக்கும் ,பொலிஸாருக்கும் ,புலனாய்வாளர்களுக்கும் பயந்து அஞ்சலிக்க முடியாது அருகிலிருந்த கடைகளுக்குள் ஒதுங்கியிருந்த மக்கள் இறந்த மாணவிகளின் உறவினர்கள் துணிவோடு அஞ்சலி செலுத்த சிவாஜிலிங்கம் பின்னால் நின்றார்கள். அஞ்சலித்தார்கள்.

ஆனால் மாறாக கடந்த காலங்களில் இந்த நினைவு நிகழ்வை நடாத்த முண்டியடித்தவர்கள் விளம்பரம் போட்ட  சாந்தி சிறீஸ்கந்தராசா,சிவமோகன்,ரவிகரன் என  எவரும் இன்று அங்கே இல்லை. மக்கள் தமது உரிமைகளை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை ஆனால் துணிவோடு வழிநடத்த துணிவான தலைமைகள் தான் இல்லை . பலருக்கு சிவாஜிலிங்கம் ஒரு கோமாளியாக தெரியலாம் ஆனால் யாழ்ப்பாணத்திலிருந்து வாடகைக்கு வான் ஃ ஆட்டோ பிடித்து நீரிழிவு நோயால் புண்ணாகி போன கால்களுடன் தேசத்தின் எல்லைகளுக்கு எல்லாம் சென்று அடக்கு முறைகளை உடைத்தெறிவேன் எங்கு மக்களுக்கு தடைகள் ஏற்படுத்த படுகிறதோ அங்கு அத்தனை தடைகளையும் அடித்து நொறுக்குவேன் என்று முழங்கும் சிவாஜிலிங்கம் ( கள்) தான் தற்போது ஏற்பட்டிருக்கின்ற எமது அரசியல் சூழலுக்கு தேவை . கடந்த ஐந்து வருடம் பணிந்து குனிந்து நீங்கள் செய்த அரசியல் தான் எம்மை இங்கே கொண்டு வந்து விட்டிருக்கிறது.

கைது செய்யபடுவேன் என தெரியும் , விசாரணைக்கு அழைப்பார்கள் என தெரியும் நாலாம் மாடிக்கும் போக வேண்டி வரும் எனவும் தெரியும் ஆனால் சிவாஜிலிங்கம் தடைகளை உடைக்க தவறுவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.