நல்லூர் திருவிழா காலத்தில் தொழிலில்?

யாழ்ப்பாணம், நல்லூர் ஆலய முன்வீதியில் அமைந்துள்ள தங்குமிட விடுதி ஒன்றில் பாலியல் தொழிலில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தில் இரண்டு தென்னிலங்கைப் பெண்கள் மற்றும் இரு இளைஞர்களை யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று (12) இரவு கைது செய்துள்ளனர்.

குறித்த தங்குமிட விடுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் தங்கியிருந்த இரண்டு தென்னிலங்கைப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை, இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்கள் 20-25 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் கொழும்பு மற்றும் புத்தளம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.