Oktober 8, 2024

புத்தர் சிலை உடைப்பு: சிங்களவர் கைது?

 

புத்தர் சிலைகளை முஸ்லீம்களே உடைத்து வருவதாக தென்னிலங்கையில் பிரச்சாரப்படுத்தப்பட்டுவரும் நிலையில் தருகோணமலை,  சேருநுவர பகுதியில்

புத்தர் சிலைகளை உடைத்து சேதப்படுத்தினர் என்ற குற்றச்சாட்டின் கீழ் சிங்களவர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் போது, அம்மூவரும் மதுபோதையில் இருந்தனர் எனத் தெரிவித்த பொலிஸார், அவர்கள், சேருநுவர- தெஹிவத்த, வேவெல கெதர, மெத நுவர பகுதிகளைச் சேர்ந்த சிங்களவர்கள் ஆவர்.முஸ்லீம்களிற்கு எதிரான பிரச்சாரங்களை முன்னெடுத்து தேர்தல் வெற்றிகளை அரசு அறுவடை செய்துவரும் நிலையில் சிங்களவர்கள் கைதாகியுள்ளனர்.