Juli 17, 2024

கலையரசன் காலத்தின் தேவை?

தேர்தலின் பின்னராக தமிழ் தேசியக்கூட்டமைப்பு பிளவை சந்திப்பது நிச்சயமாகியுள்ளது.

கட்சி தலைவர் மாவைக்கு தெரியாமல் சுமந்திரன்-சிறீதரன் கூட்டு கலையரசனை கிழக்கிற்கான தேசியப்பட்டியல் உறுப்பினராhக நியமித்து மாவைக்கான சந்தரப்பத்தை தடுத்துள்ளன.

அதிலும் பங்காளிக்கட்சிகளிற்கே தெரியாமல் முன்னெடுக்கப்பட்ட இந்நடவடிக்கையினை நியாயப்படுத்தியுள்ள சுமந்திரன் தேர்தல் பிரச்சாரக் காலத்தில் நான் எந்தவொரு சக வேட்பாளருக்கும் எதிராக, எந்த மேடையிலும் பேசவில்லை. தேர்தல் முடிவடைந்து விட்டதால், நடந்த உண்மைகளை மக்களுக்குத் தெளிவூட்ட வேண்டிய கடப்பாடு பிறந்திருக்கிறது.

எனக்கெதிராகக் கட்சிக்குள்ளிருந்தே மிக மோசமான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது.எனக்கும், சிறீதரனுக்கும் வாக்களிக்க வேண்டாமென கட்சிக்குள்ளிருந்த சிலரால் துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. இதை நான் கட்சித் தலைவரிடம் சுட்டிக் காட்டியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.கட்சிக்கு மக்கள் தெளிவான செய்தியைச் சொல்லியிருக்கிறார்கள். சரிவைத் தடுக்க வேண்டுமெனில் கட்சிக்குள் மாற்றங்கள் அத்தியாவசியம் எனவும் போர்க்கொடி தூக்கி வருகின்றார்.

இதனிடையே கலையரசன் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டம் துறைநீலாவணையூர் பூர்வீகத்தமிழன்,

?அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளியில் வாழ்க்கை துணையுடன் வளம் செழித்த மண்ணில் வலிகள் பலசுமந்து வதைகள் பல கண்டும் தமிழ்தேசியத்திற்காய் பற்றுடன் கொள்கை தவறாது சேவைசெய்யும் தொண்டன்.

?2006, மாவிலையாற்றில் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் போர் ஆரம்பித்த பின்பு கிழக்கு மாகாணத்தில் பல இன்னல்களும் அவலங்களும் ஏற்பட்டகாலம்.

?தமிழ்தேசியகூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாமனிதர்களான ஜோசப்பரராசசிங்கம், ரவிராஜ், சிவநேசன், முன்னாள்பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் சந்திரநேரு, கிழக்குபல்கலைக்கழக விவசாயபீட பேராசிரியர் ரவிந்திரநாத்,தமிழர் புனர்வாழ்வுக்கழக பிறேமினி உட்பட ஏழு தொண்டர்கள், ஊடகவியலாளர்களான மாமனிதர் சிவராம், நாட்டுப்பற்றாளர் நடேசன் உட்பட பலர் தமிழ் ஆயுத ஒட்டுக்குழுக்களால் கொலைசெய்யப்பட்ட காலம்.

?மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினராக அப்போது இருந்த பா.அரியநேத்திரன் கனகசபை ஐயா, தங்கேஸ்வரி அக்கா,ஜெயானந்த மூர்த்தி ஆகியோரின் உறவினர்களை கடத்திவைத்த காலம்.

?நாவிதன்வெளியில் தவராசா கலையரசனையும் அவரின் குடும்பத்தையும் இலக்குவைத்து தமிழ் ஆயுத ஒட்டுக்குழுக்கள் வலைவிரித்தபோது பல கஸ்டங்களை எதிர்கொண்டு வீட்டை விட்டு மறைவு வாழ்வு வாழ்ந்தார்.

?அப்போது 22,தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் சொந்த மாவட்டங்களுக்கு செல்லமுடியாது கொழும்பில் முடக்கப்பட்ட காலம்.

?கலையரச்ன் உட்பட அம்பாறைமாவட்டத்தை சேர்ந்த எமது கட்சி பற்றாளர்கள் பலருக்கு இப்படியான உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டது.

?நாம் அவர்களை இரகசியமாக அம்பாறை மாவட்டத்தில்இருந்து கொழும்புக்கு அழைத்துச்சென்று எம்முடன் பாராளுமன்ற மாதிவெல பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுதியில் தங்கவைத்து பாதுகாத்தோம்.

?பலர் ஓடி ஒளித்தபோது உயிரை பணயம் வைத்து எம்முடன் இணைந்து தமிழ்தேசியத்திற்காய் செயல்பட்ட ஒரு உத்தமன்.

?நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினராக இருந்து பல அபிவிருத்திப்பணிகளை செய்த இவர் 2012,ல் கிழக்குமாகாணசபை உறுப்பினரானார்.

?2015, பொதுத்தேர்தலில் சொற்ப வாக்குகளால் பாராளுமன்ற உறுப்பினர் பதவி இவருக்கு கிடைக்கவில்லை.

?2018 உள்ளூராட்சிசபைதேர்தலில் மீண்டும் நாவிதன்வெளி தவிசாளராக தெரிவானார்.

?இலங்கை தமிழரசு கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்

?இம்முறை பொதுத் தேர்தலில் (2020) அம்பாறை மாவட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு சார்பாக வேட்பாளராக களம் இறங்கி கணிசமான வாக்குகளை பெற்ற ஒருவர்.

?இன்னும் சொல்லப்போனால் தமிழ்தேசியகூட்டமைப்பு அரசியலில் இவர் உறுதியுடன் உண்மையாக செயல்பட்டமையால் தமது பொருளாதாரத்தில் பெரும்பங்கை இழந்தார்.

?தமது சொத்துக்களையும் சுகத்தையும பாராமல் தமிழ்தேசியத்தின் கொள்கைக்காக பற்றுறிதியுடன் சோரம் போகாமல் பயணிக்கும் நேரிய தமிழன் தவராசா கலையரன்