September 11, 2024

அரசாங்கத்தின் அலட்சியமே RATP ஊழியரின் உயிரிழப்புக்கு காரணம்.

அரசாங்கத்தின் அலட்சியமே RATP ஊழியரின் உயிரிழப்புக்கு காரணம் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ள.

RATP ஊழியர் ஒருவர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்திருந்தார். தாமதமாக வழங்கப்பட்ட முகக்கவசங்களே இதற்கு காரணம் என புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

37 வயதுடைய Cyril Boulanger எனும் RATP இன் பாதுகாப்பு அதிகாரி கொரோனா வைரஸ் காரணமாக Lille பல்கலைக்கழக மருத்துவமனையில் உயிரிழந்திருந்தார். SUD union தொழிற்சங்கத்தைச் சேர்ந்த குறித்த அதிகாரியின் உயிரிழப்பு மிகுந்த கவலையையும், கோபத்தினையும் ஏற்படுத்தியுள்ளதாக தொழிற்சங்க தலைவர் Marc Brillaud தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘அரசாங்கத்தின் அலட்சியமே இந்த உயிரிழப்புக்கு காரணம் எனவும், தொழிற்சங்கம் தரப்பில் மார்ச் 15 ஆம் திகதியே போதிய அளவு முகக்கவசங்களை கோரியிருந்ததாகவும், ஆனால் அவை மிக தாமதமாகவே வழங்கப்பட்டுள்ளன’ எனவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக பல தடவைகள் தொடருந்து தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு பொருட்கள், முகக்கவசங்கள் வழங்குமாறு அரசை தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியாக கோரி வந்தது.

ஆனால் ஏப்ரல் 3 ஆம் திகதி அளவிலேயே FFP2 வகை முகக்கவசங்கள் வழங்கப்பட்டதாக UNSA-RATP தொழிற்சங்கம் தெரிவித்துள்ளதோடு, மேலதிகமாக தேவைப்படும் பாதுகாப்பு பொருட்களை உடனடியாக வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.