யாழில் பெண்களும் கைது:பொலிஸாரும் தனித்து வைப்பு!

யாழ்ப்பாணத்தில் இன்று காலை முதல் ஊரடங்கு வேளையில் நடமாடிய 40 பேர் யாழ்ப்பாண போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 10 பேர் பெண்களும் உள்ளடங்கியுள்ளதாக தெரியவருகின்றது.
இதனிடையே தென்னிலங்கை போபிட்டிய பகுதியில்; கைதுசெய்யபட்ட இளைஞரொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 10 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென தெரிவிக்கப்படுகின்றது.
கைதுசெய்யப்பட்ட 28 வயது இளைஞன் 4ஆம் திகதி இரவு வத்தளை பிரதேச பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்து திருடியபோது பிரதேசவாசிகளால் தாக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதனையடுத்து, தாக்குதல்களால் காயமடைந்திருந்த சந்தேகநபர் ராகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போதே, அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.