பிரான்சின் நகரபிதா ஜேர்மனி வைத்தியசாலையில் சாவு!!

email sharing button
sms sharing button
messenger sharing button
whatsapp sharing button
print sharing button
skype sharing button
கொரோனாத் தொற்றினால் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் Haut-Rhin மகாணத்தின் Saint-Louis நகரத்தின் நகரபிதா Jean-Marie Zoellé கொரோனோ வைரஸ் தாக்கத்தினால் சாவடைந்துள்ளார். மிகவும் உயிராபத்தான நிலையில் ஜேர்மனியின் பொன் (BONN) நகர வைத்தியசாலையில் சாவடைந்துள்ளார்.
COVID-19 தொற்றின் தீவிரத்தால் முலூசிலுள்ள St. Petru வைத்தியசாலையின் அவசரசகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், கடந்த 28ம் திகதி மார்ச் மாதம், ஜேர்மனிக்கு இடம் மாற்றப்பட்டிருந்தார்.
இவரின் சாவினை சுவிற்சர்லாந்தின் எல்லைப்பகுதியிலுள்ள Saint-Louis நகரசபை பெரும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளது. இவரிற்கான மரியாதை வணக்க நிகழ்வு, நாட்டு நிலைமை சீரடைந்த பின்னர் மாநகரசபையில் நடாத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.