September 9, 2024

தண்டம் அறவிடுவது எங்களின் இலக்கு அல்ல: சுவிஸ் காவல்துறை

தண்டம் அறவிடுவது எங்களின் இலக்கு அல்ல: சுவிஸ் காவல்துறை
கூட்டாட்சியில் கொறோனாவின் தகவல் பரிமாற்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட டானியல் கொக்: “நேற்றில் பார்க்க இன்று 590 பேருக்கு கொறோனா என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. “நிலைமை நன்றாகின்றது என்று சொல்வதற்கான நேரம் இன்னும் வரவில்லை.

இன்னும் பிரச்சனை முழுமையாக தீர்க்கப்படவில்லை. எனவே தொடர்ந்தும் அறிவித்தல்களிற்கும், நடவடிக்கைகளின்கும் ஏற்ப நடந்து கொள்வது முக்கியமாகும். மற்றும் முக்கியமாக வேறு நோய்கள் இந்நேரம் வரும் பொழுது பயத்தினால் அவசர மருத்துவ வாகனத்தில் செல்ல வேண்டாம். அதுவும் பிள்ளைகளை கூட்டிக்கொண்டு செல்ல வேண்டாம்.

பிள்ளைகளிற்கு இது வரை இப்படியான நிலைகளில் கொறோனாவாக இருந்தது மிக குறைவாகும்.”

“வெவ்வேறு நாடுகளிற்கு சுவிஸில் இருந்து சென்றவர்களை மீண்டும் சுவிஸிற்கு அழைத்து வரும் பணி மலையுச்சியை கடந்து விட்டது. எனினும் இன்னும் வெளநாடுகளில் நிற்பவர்கள் அங்கிருந்து புறப்படும் விமானங்களை பயன்படுத்தி சுவிஸிற்கு வந்து சேரவும்! ஆனால் 1000ற்கும் குறைந்தவர்கள் மட்டுமே தற்பொழுது சுவிஸில் இருந்து சென்று வெளிநாடுகளில் இன்னும் நிற்கிறார்கள் என சுவிஸின் வெளிநாட்டு அலுவலகங்களிற்கான துறை தெரிவித்துள்ளது.” என சுவிஸ் நெருக்கடி மையத்தின் பொறுப்பாளர் கான்ஸ் பீற்றர் லென்ஸ் கூறினார்.

“கடந்த சனியும், ஞாயிறும் பெரும்பாலானவர்கள் அழகான காலநிலையின் போதும் வீடுகளிலே இருந்தனர். அவர்களிற்கு என் நன்றியைத் தெரிவிக்கின்றேன்.

எனினும் அனைத்து மாநிலங்களிலும் காவல்துறையின் கண்காணிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றன. இவ்வாறே ஈஸ்ரர் பண்டிகை நாட்களிலும் கண்காணிப்புகள் தொடரும். மக்கள் பொது இடங்களில் கூடுவதையும், தனிப்பட்ட விழாக்களை செய்வதையும் நாங்கள் கண்காணிப்பதன் அர்த்தம் தண்டம் அறவிட வேண்டும் என்பதற்காக அல்ல. கூட்டாட்சியின் அறிவுறுத்தல்களின் மூலம் தண்டம் அறவிடுவது அல்ல எங்களின் இலக்கு. அவற்றை நடைமுறைப்படுத்துவதே எமது இலக்கு! மற்றும் ஒன்றை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். புதிய முடிவுகளிற்கு காரணம் காவல்துறை அல்ல. புதிய முடிவுகள் தொற்றுநோயியல் வளர்ச்சியில் இருந்தே எடுக்கப்படுகின்றன. காவல்துறையின் சார்பாக நாங்கள் மக்களிற்கு கூறுவது உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள்! பயணங்களை தவிருங்கள்! மலைகளிற்கு செல்வதையும் இப்பொழுது தவிருங்கள்! அதற்கான நேரம் விரைவில் வரும். இறுதியாக ஒரு நல்ல செய்தி: வீட்டு வன்முறைகள் அதிகரிக்கலாம் என பயந்தோம். ஆனால் தற்பொழுது அப்படி ஒரு நிலை நல்ல காலம் வரவில்லை!” என சுவிஸ் மாநிலங்களின் காவல்துறை தளபதி ஸ்ரெபன் பிலெட்லர் கூறினார்.