கொழும்பிலிருந்து வீடு திரும்ப ஏற்பாடு?

ஊடரங்கு சட்டத்தால் கொழும்பு மாவட்டத்தில் நிர்கதியாகியுள்ள வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என, கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
கொழும்பு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இன்று (06) முற்பகல் இடம்பெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், இந்த விடயம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஊடாக, விசேட ஜனாதிபதி செயலணிக்கு தெரியப்படுத்தி, அவர்களுடன் இணைந்து இன்னும் ஒரு வார காலத்துக்குள் நிர்கதியாகியுள்ளவர்கள் அவர்களது சொந்த மாவட்டங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் மனோ கணேசன் கூறினார்.