September 16, 2024

மூன்று வாரங்களுக்கு முடங்கப் போகும் யாழ்ப்பாணம்?

மூன்று வாரங்களுக்கு முடங்கப் போகும் யாழ்ப்பாணம்?
தற்போது நடைமுறையில் இருக்கும் கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு நீடிக்கும் பட்சத்திலேயே எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் யாழ்ப்பாணத்தைக் காப்பாற்றி விடலாம் என்று யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஏகாம்பரநாதன் தேவநேசன் தெரிவித்துள்ளார்.

“யாழ்ப்பாணத்தில் 319 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ள நிலையில் 50 பேரை மாத்திரமே பரிசோதனை செய்துள்ளோம். எனவே அனைவரது மாதிரிகளையும் மூன்று தடவைகளாவது பரிசோதனை செய்யவேண்டுமாயின் ஆயிரம் தடவைகள் ஆய்வுகூடச் சோதனைக்குட்படுத்தவேண்டும். அதனை விரைந்து செய்வதற்கு எம்மிடம் வசதிகளும் இல்லை” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.