September 9, 2024

கொடிய கொரோனாவை கண்டுபிடிக்கும் கருவியை கண்டுபிடித்த…. இலங்கை இளைஞன்!

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறியவும், மருத்துவம் செய்வதற்குமான இயந்திரமொன்றை இளைஞர் ஒருவர் கண்டுபிடித்திருக்கின்றார்.

மொணராகலை, வெல்லவாய பிரதேசத்திலுள்ள இளஞ்ர் ஒருவரே இந்தக்கருவியை கண்டுபிடித்துள்ளார்.

வாகனங்களிலிருந்து அகற்றப்படும் உதிரிப்பாகங்கள் மற்றும் ஒதுக்கப்படுகின்ற கழிவுப் பாகங்களை வைத்தே அவர் இந்த கருவியை உருவாக்கியிருக்கின்றார்.

மேலும் மருத்துவர்களும் அந்தக் கருவி மூலம் பயன்பாடுகளை பெறமுடியும் என்றும் குறித்த இளைஞர் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.