September 9, 2024

கிளிநொச்சியில் இன்று ஊரடங்கு தளர்த்தப்பட்ட போது கூடிய கூட்டம்.

கிளிநொச்சியில் இன்று ஊரடங்கு தளர்த்தப்பட்ட போது கூடிய கூட்டம்.
இலட்ச கணக்கான மக்கள் அரை வயிறு நிறைத்து கஸ்டத்தின் மத்தியில் ஊரடங்கு சட்டத்தை மதித்து நடக்கும் போது ஊரடங்கு தளர்த்தப்படும் வேளையில் இவ்வாறு மக்கள் கூடுவதனால் இந்த ஊரடங்கினால் என்ன பயன்?
ஊரடங்கு தளர்த்தப்படாமல் அனைத்து மக்களுக்கும் அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு அனுப்பி வைக்க கூடிய பொறிமுறையை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும்.
இல்லையேல் நூற்றுக் கணக்கான உயிரிழப்புகள் ஏற்படுவதுடன் தமது உயிரை பணயம் வைத்து, நித்திரை விழித்து சேவையாற்றும் வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதார துறை சார்ந்த ஊழியர்கள், தியாகம் வீணாக போய் விடும்.
இது தொடர்பில் இன அழிப்பு அரசாங்கம் உடனடியாக அக்கறை கொள்ள வேண்டும்.