Mai 30, 2023

ஹிஸ்புல்லா தளபதி கொடூர கொலை!

ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி அலி மொஹமட் யூனிஸ் தெற்கு லெபனானில் அடையாளம் தெரியாத நபர்களினால் நேற்று (04) சுட்டும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவரது உடலானது கத்திக் குத்து மற்றும் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் வீதியின் ஓரேத்தில் கண்டெடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனவரி மாதம் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் குட்ஸ் படை ஜெனரலான கசாம் சாெலைமானியின் நெருங்கிய நண்பர்களுள் யூனிஸும் ஒருவர் எனவும் ஈரானிய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.