September 11, 2024

வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் முகமூடி கொள்ளையர்கள்

வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் முகமூடி கொள்ளைகளில் ஈடுபட்டதுடன் பெண்களை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய சைக்கோ திருடர் கும்பல் அகப்பட்டுள்ளது.எனினும் வடமாகாணம் முழுவதும் வலைப்பின்னலை கொண்ட அணியின் பெருமளவிலானாவர்கள் தலை மறைவாகியுள்ளனர்.
இந்த கும்பலை சேர்ந்த ஐந்து சந்தேக நபர்கள் இன்று அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம், சுன்னாகம், சாவகச்சேரி, கொடிகாமம் மற்றும் மன்னர் உள்ளிட்ட பகுதிகளில் முகமூடிகளை அணிந்தவாறு வாள்கள் மற்றும் கைக் குண்டுகளை காண்பித்துஅச்சுறுத்தி கொள்ளையிட்டு வந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்படும் போதுஅவர்களிடம் இருந்து 2 பழைய கைக்குண்டுகள், 3 வாள்கள்,2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு போன், ஒருதொகை நகைகள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சிறுப்பிட்டியை சேர்ந்த இருவரும், ஏழாலை மற்றும் நெல்லியடியை சேர்ந்த இருவருமாக ஐவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லியடியைச் சேர்ந்த முகுந்தன் என்ற தங்க நகை வர்த்தகரே திருட்டு நகைகளை உருக்கி தங்க பாளங்களாக்கியமையும் கண்டறியப்பட்டுள்ளது.
திருடச் சென்ற வீடுகளில் ஆயுத முனையில் பாலியல் வன்புணர்வுகளை அரங்கேற்றி மறைத்து வைக்கப்பட்ட நகைகளை மீட்பது இவர்கள் பாணியென தெரியவருகின்றது.
இவர்களுடன் தொடர்புடைய மேலும் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் ஐவரையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவர்கள் அனைவரையும் 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதேவேளை சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இதுவரை 40 இலட்சம் ரூபா பெறுமதியாக நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளமை ஆரம்ப விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.