September 9, 2024

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ரூபா 30,000 கடன் உதவி

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ரூபா 30,000 கடன் வழங்க இலங்கை சேமிப்பு வங்கி முன்வந்துள்ளது.
கொரோனா வைரசினால் சிரமங்களை எதிர்நோக்கியுள்ள சுமார் 50 ஜம்பதாயிரம் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் சேமிப்பு வங்கி இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
இலங்கை முன்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசங்க ஸ்ரீ நாத் மற்றும் சேமிப்பு வங்கியின் தலைவர் திருமதி கேசிலா ஜயவர்தன ஆகியோர் இதுதொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்தி;ட்டனர்.