September 10, 2024

கொரோனா வைரஸை தொடர்ந்து புரட்டி எடுக்கப்போகும் இரண்டு புயல்கள்.!

கொரோனா வைரசால் உலகளவில் அதிகம் அமெரிக்கா 311,357 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,452 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இந்நிலையில் இரண்டு புயல்கள் கலிபோர்னியா மாகாணத்தை புரட்டியெடுத்த விடுமோ என்ற அச்சத்தில் அமெரிக்கா உள்ளது. முதல் புயல் நேற்று கரைக்கு வந்து மாநிலத்தின் வடக்குப் பகுதியில் மூன்றில் இரண்டு பகுதிகளை கடுமையான மழை பெய்தது.

பின்னர் சியரா மற்றும் வட கலிபோர்னியா மலைகளுக்கு இடைப்பகுதியில் பனி மழையும் பெய்தது. பின்னர் பனிமழை கிழக்கு நோக்கி நகர்ந்தது. இரண்டாவது புயல் மேலும் சக்தி வாய்ந்ததாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இரண்டாவது புயல் இன்று கரையை கடக்கிறது. அப்போது கலிபோர்னியா மாகாணத்தில் பெரும் பகுதிகளிலும் பலத்த காற்று வீசும் என்பதால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் ஏப்ரல் 5 மற்றும் ஏப்ரல் 6 தேதிகளில் தெற்கு கலிபோர்னியாவில் பலத்த மழை பெய்யும். இம்மாதம் சராசரியைக் காட்டிலும் மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகமான மழை பெறும் என அமெரிக்க வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.