September 11, 2024

நீர்கொழும்பின் இரு மரணங்களின் காரணம் இதாே!

நீர்கொழும்பு வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சந்தேக நபர்களாக இருந்த இருவர் இன்று (01) காலை மரணமாகியிருந்தனர்.

இந்நிலையில் அவர்களுக்கு கொரோனா (கொவிட்-19) நோய் தொற்று இல்லை என்பது சற்றுமுன் உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த இருவரது மரணத்துக்கும் பிற நோய்களே காரணம் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

நீர்கொழும்பை சேர்ந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.