November 23, 2024

கோத்தா பிரதமராகின்றார்?

A Sri Lankan government supporter carries a national flag after attacking the anti-government protesters outside president's office in Colombo, Sri Lanka, Monday, May 9, 2022. Government supporters on Monday attacked protesters who have been camped outside the offices of Sri Lanka's president and prime minster, as trade unions began a “Week of Protests” demanding the government change and its president to step down over the country’s worst economic crisis in memory. (AP Photo/Eranga Jayawardena)

கோத்தபாயவை இலங்கைக்கு தருவிக்கும் முயற்சி மும்முரமாகியிருக்கின்றது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு வருகை தந்ததன் பின்னர் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்

நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே, மற்றும் மேஜர் பிரதீப் உந்துகொட தெரிவிக்கையில்,

கோட்டாபய ராஜபக்ச விரைவில் இந்த நாட்டுக்கு வரவேண்டும். அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். அவர் பிரதமராவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. அவர் 69 இலட்சம் மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி.

அப்படியானால் அவர் பிரதமர் ஆவதை யாருக்கு தான் பிடிக்காது? நான் அதற்கு எதிரானவன் இல்லை, அவர் கேட்டால் அவருக்கு வாக்களிப்போம் என தெரிவித்தார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert