November 23, 2024

உலகையே உலுக்கியுள்ள கொரோனா வைரஸ் செயற்கையாக உருவாக்கப்பட்டதாக கூறப்பட்ட தகவல்

கொரோனா இயற்கையாக உருவானதா அல்லது சோதனை கூடத்தில் உருவாக்கப்பட்ட செயற்கையான வைரஸா என்பதற்கு அமெரிக்க மருத்துவ விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

சீனாவில் தொடங்கிய இந்த கொடூர கொரோனா வைரஸ் தற்போது உலகின் வல்லரசு நாடுகள், ஏழை நாடுகள் என்று பல நாடுகளை பாதித்து இருக்கிறது. உலகம் முழுக்க மொத்தம் 150 நாடுகள் இதனால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவிய தொடக்க காலத்தில், இந்த வைரஸ் சோதனை கூடத்தில் உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

அதாவது சோதனை கூடம் ஒன்றில் செயற்கையாக உருவாக்கப்பட்டு அதன் மூலம் மனிதர்களுக்கு பரப்பப்பட்டு இருக்கலாம் என்று தகவல்கள் பரவின.

இதை ஒரு பயோ வார் என்று கூறினார்கள். இன்னொரு பக்கம் இந்த வைரஸ் சோதனை கூடத்தில் இருந்து, தவறுதலாக கசிந்து இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. நிறைய காரணங்கள் சொல்லப்பட்டது இதற்கு எல்லாம் காரணம் இல்லாமல் இல்லை. மக்கள் இப்படி சந்தேகம் அடைவதற்கு சில காரணங்கள் இருந்தது. சீனாவின் வுஹன் நகரத்தில் இருக்கும் வைரஸ் ஆராய்ச்சி நிறுவனம்தான் இந்த சந்தேகத்தை வலுப்படுத்தியது.

உலகம் முழுக்க வல்லரசு நாடுகள் தற்போது பயோ வார் எனப்படும் உயிரியல் போருக்காக தயாராகி வருகிறது. சீனா, இஸ்ரேல், ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பயோ ஆயுதங்களை தயாரித்து வருகிறது.

சீனாவில் இதற்காக வைரஸ் ஆராய்ச்சி மையம் நிறைய உள்ளது. சீனா மத்திய வைரஸ் ஆராய்ச்சி மையம் சீனாவின் வுஹன் நகரத்தில் இருக்கும் மத்திய வைரஸ் ஆராய்ச்சி மையம்தான் இந்த சந்தேகங்களை அதிகம் ஆக்கியது. 1990 களில் இருந்து பயோ ஆயுதங்களை தயாரிப்பதில் சீனா ஆர்வம் காட்டி வருகிறது.

இதற்காக அந்நாடு வுஹன் நகரில் இருக்கும் பயோ ஆராய்ச்சி நிறுவனத்தை 2015ல் புதுப்பித்தது. அங்கு இருக்கும் வுஹன் இன்ஸ்டிடுயூட் ஆப் வைராலஜியில்தான் பயோ ஆயுதங்கள் தயாரிப்படுகிறது.

சீனாவின் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இந்த பகுதி உள்ளது. கொரோனா வைரசை வைத்து சீனா ஆயுதங்களை தயாரிக்க நினைத்து இருக்கும். அதை தங்கள் மக்கள் மீது ஏவிவிட்டு அதன் மூலம் உலகத்தை கட்டுப்படுத்த நினைத்து இருக்கும். உலக தற்போது சீனா இதில் இருந்து வெளியே வந்துவிட்டது.

இனி சீனா உலகை கட்டுப்படுத்தும் . எல்லாம் கட்டுக்கதை சீனாவிடம் இதற்கு மருந்து இருக்கும். இதை சீக்கிரம் சீனா வெளியிடும் என்று உலகம் முழுக்க பலர் கூறினார்கள்.

ஆனால் இந்த வைரஸ் சோதனை கூடங்களில் உருவாக்கப்பட்டு இருக்க வாய்ப்பே இல்லை என்று கூறுகிறார்கள். இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் கண்டிப்பாக பயோ வாராக இருக்க வாய்ப்பே இல்லை என்று கூறுகிறார்கள். இதற்கு உலகம் முழுக்க மக்கள் பல காரணங்களை அடுக்குகிறார்கள்.

ஒரே குடும்ப வைரஸ் இந்த வைரஸ் குறித்து அமெரிக்காவில் நேச்சர் மெடிசன் என்ற இதழில் வெளியான ஆய்வு கட்டுரை ஒன்று கொரோனா வைரஸ் தாக்குதல் கண்டிப்பாக பயோ வாராக இருக்க வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளது.

வைரஸ் ஆராய்ச்சியாளர் கிரிட்ஸன் ஆண்டர்சன் தலைமையில் நடந்த இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டதாவது, SARS-CoV-2 வைரஸ் என்பது கொரோனா வைரஸ் குடும்பத்தை சேர்ந்த வைரஸ் ஆகும்.

ஜீன்கள் ஆராய்ச்சி இதன் ஜீன்கள் எப்படி இருக்கும் என்று முதல் முதலில் சீன மருத்துவர்கள்தான் புகைப்படங்களை வெளியிட்டனர். அதன்பின் உலகம் முழுக்க பல ஜீன் விஞ்ஞானிகள் இதன் புகைப்படத்தை வெளியிட்டனர்.

இந்த கொரோனா வைரஸின் ஜீன்களை இதற்கு முன் உருவான வைரஸ்கள் உடனும், கொரோனா குடும்பத்தில் உள்ள வைரஸ் உடனும் வைத்து ஒப்பிட்டு நிறைய சோதனைகளை செய்தோம். ஸ்பைக் புரோட்டின்கள் சோதனை நாங்கள் முக்கியமாக கொரோனா வைரஸில் இருக்கும் ஸ்பைக் புரோட்டின்கள் எனப்படும் கூம்பு போன்ற பகுதியில் ஆராய்ச்சிகளை செய்தோம். இந்த பகுதிதான் மனித உடலில் உள்ளே செல்ல உதவுகிறது.

அதேபோல் இந்த ஸ்பைக் புரோட்டின்கள் கொண்டு இருக்கும் ஆர்பிடி எனப்படும் the receptor-binding domain பகுதிதான் உடலில் இருக்கும் செல்களை துளையிட்டு, அதற்குள் சென்று நோயையே பரப்புகிறது. இதன் மீதுதான் நாங்கள் எங்கள் கவனத்தை செலுத்தினோம். எதை குறி வைக்கிறது மனித உடலில் இருக்கும் ACE2 எனப்படும் ரத்த அழுத்த செல்களைத்தான் இந்த ஸ்பைக் புரோட்டின்கள் குறி வைக்கிறது.

இந்த ஸ்பைக் புரோட்டின்கள் முதலில் ரத்த அழுத்த செல்கள் உடன் இணைந்து அதன்பின் வளர்ந்து அதன்பின்தான் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி செல்களை தாக்குகிறது. இது இயற்கையாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. இப்படிபட்ட ஸ்பைக் புரோட்டின்களை சோதனை கூடத்தில் உருவாக்க முடியாது.

விலங்குகளில் இருந்து உருவாகும் வைரஸ் இதில் இருக்கும் ஸ்பைக் புரோட்டின்களின் குணம் எல்லாம் அப்படியே விலங்குகளில் இருந்து உருவாகும் வைரஸ்களின் குணத்தை கொண்டு உள்ளது. அதே சமயம் இந்த புதிய கொரோனா வைரஸ் இதற்கு முன் வந்த சார்ஸ் வைரஸில் இருந்து நிறைய மாற்றங்களை பெற்றுள்ளது.

ஆகவே சார்ஸ் வைரஸ் மூலம் இந்த கொரோனா வைரஸை யாரும் சோதனை கூடத்தில் உருவாக்கவில்லை என்பது புலனாகிறது.