கள்ள மண்ணா? நல்ல மண்ணா??-டக்ளஸ்
கிளிநொச்சி பூநகரி குடமுருட்டி ஆற்றுப்பகுதியிலிருந்தும் மண்டைக்கல்லாறு பகுதியிலிருந்தும் சட்டவிரோதமாக மணல் அகழ்வினை காவல்துறை மற்றும் வனவளத்திணைக்களம் இணைந்து முன்னெடுத்துவருகின்ற நிலையினில் பின்னணியில் ஈபிடிபி முக்கியஸ்தர்கள் உள்ளமை அம்பலமாகியுள்ளது.
குறித்த ஆற்றுப்பகுதிகளிலிருந்து மீள்குடியேற்றத்தின் பின்னர் தொடர்ச்சியாக மணல் அகழ்வு நடைபெறுகின்றது. சட்டரீதியற்ற அனுமதிகள் ஏதுமின்றி தொடர்ச்சியாக மணல் கொண்டு செல்லப்படுவதை காணக்கூடியதாகவுள்ளது.
இதேவேளை,; பூநகரி சங்குப்பிட்டி வழியாக நாளொன்றுக்கு அறுபது வரையான டிப்பர்களில் மணல் ஈபிடிபி முக்கியஸ்தர் ஒருவரது பங்கெடுப்பில் கொண்டு செல்லப்படுகின்றது.
இந்நிலையில் சங்குப்பிட்டி பாலத்தடியில் மணல் ஏற்றிச்சென்ற பாரவூர்திகள் லைசென்ஸ் வைத்துள்ளனவாவென அரச அமைச்சர் டக்ளஸ் சோதனையில் இன்று ஈடுபட்டிருந்தார்.