November 23, 2024

குருந்தூர்மலை:அனைத்தும் கிடங்கினுள்?

குருந்தூர்மலையில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட விகாரை விவகாரம் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறும் வரை தமிழ் தரப்புக்களிற்கு எதிரான வழக்கையும் கிடப்பில் போட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குருந்தூர் மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதாக தெரிவித்து தொடரப்பட்ட வழக்கானது இன்றையதினம் (11) முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்திலே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

“குருந்தூர்மலை பிரதேசத்திலே நீதிமன்ற கட்டளையை நிறைவேற்றப்பட வேண்டும் என அமைதிவழியிலே போராட்டத்தை நடாத்திய அரசியல் வாதிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளடக்கிய நபர்களுக்கு எதிராக முல்லைத்தீவு காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்N;க நீதிமன்றத்திலே எடுத்து கொள்ளப்பட்டது.

வழக்கின் போது முல்லைத்தீவு காவல்துறையினர் தாங்கள் இது தொடர்பாக சட்டமா அதிபரிடம் மேலதிக ஆலோசனை பெற வேண்டும் என விண்ணப்பம் செய்திருந்தனர்.

இன்றையதினம் சந்தேக நபர்கள் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் உட்பட ஐந்து நபர்களாக இணைக்கப்பட்டிருந்தார்கள். 

சட்டமா அதிபரின் ஆலோசனை பெறும் வரையில் இவ்வழக்கினை கிடப்பில் போடவேண்டும் எனவும் மேலதிகமாக இந்த வழக்கினை தொடர வேண்டும் என சந்தர்ப்பம் ஏற்பட்டால் மாத்திரம் சந்தேக நபர்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டு மீண்டும் வழக்கானது நீதிமன்றிலே கொண்டு செல்லப்பட முடியும் என  விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது.

அதனை ஏற்றுக்கொண்ட நீதவான் வழக்கினை இன்றைய தினத்திலிருந்து கிடப்பில் போட்டுள்ளார். மீளவும் அறிவித்தல் கிடைத்தால் மாத்திரம் சந்தேக நபர்கள் வழக்கிற்கு வருகை தர வேண்டும்” என மேலும் தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert