கொக்கிளாய் புதைகுழி:யாழில் பகுப்பாய்வு!
முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான பகுப்பாய்வு எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதைபொருள் அகழ்வுப்பணிகளை முன்னெடுத்த சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ இன்று முல்லைதீவு நீதிமன்றத்திற்கு பகுப்பாய்வு பற்றிய தகவலை தெரிவித்துள்ளார்.
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இன்று இடம்பெற்றது.
இதுவரை நடைபெற்ற அகழ்வுப் பணிகளின் போது மீட்கப்பட்ட 40 மனித எச்சங்களின் வயது மற்றும் பாலினம் தொடர்பில் எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் பகுப்பாய்வு முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அதன்போது சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ இன்று நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.
அத்துடன் திட்டமிட்டவாறு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி மீண்டும் அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள வழக்கு விசாரணையில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அகழ்வுப்பணிகளிற்கு நிதி ஒதுக்கீடு போதியளவில் இன்மையினை காரணங்காட்டி புதைகுழி அகழ்வு மார்ச் மாதத்திற்கு பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.