November 23, 2024

கவிஞருக்கு நான்கு வருடங்களின் பின்னராக விடுதலை !

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜெஸீம் வழக்கிலிருந்து 4வருடங்களின் பின்னராக முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் கோத்தபாய ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் கைது செய்யப்பட்ட அஹ்னாப் ஜெஸீம், கடந்த 2021 ஆம் ஆண்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே, இன்று வழக்கிலிருந்தும் முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தீவிரவாத குற்றச்சாட்டுகளின் கீழ் கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜெஸீம் கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

சிறுவர்களுக்கு தீவிரவாதம் மற்றும் வன்முறையை ஊக்குவித்ததாகவும், அவரது இலக்கியப் பணியின் மூலம் தீவிரவாதத்துக்கு உதவியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த அஹ்னாப் ஜெஸீமுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிலிருந்து அவர் இன்று முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுடன் தமக்கு தொடர்பிருந்ததாக ஒப்புக் கொள்ளுமாறும் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக அஹ்னாப் ஜெஸீம்  தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert