கொலைச்சதியென்கிறது முன்னணி!
தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் சேர்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது கொலை முயற்சி முன்னெடுக்கப்பட்ட போதும் அவர் பாதுகாப்பாக இருப்பதாக கட்சி பிரமுகர் சட்டத்தரணி காண்டீபன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் விளையாட்டுக் கழக உறுப்பினர்களை சந்திப்பதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சென்று அங்கு விளையாட்டுக்கழக உறுப்பினர்களை சந்தித்துக் கொண்டிருந்த வேளை அங்கு சந்தேகத்திற்க்கு இடமான ஒருவர் அங்கு நடமாடிக் கொண்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.