November 23, 2024

ஆமியை குறைக்கவேண்டாம்:மகாநாயக்கதேரர்கள்!

தமிழர் தாயக பகுதிகளில் நிலைகொள்ள வைக்கப்பட்டுள்ள படைகளை குறைக்கவேண்டாமென  மகாநாயக்க தேரர்கள் இலங்கையின் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

குறிப்பாக அனைத்து வழிபாட்டு தலங்களில் உள்ள இராணுவத்தினரை அப்புறப்படுத்த வேண்டாம் என மாகாநாயக்க தேரர்கள், தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான பௌத்தர்கள் வாழும் வடக்கு, கிழக்கி மற்றும் ஏனைய பகுதிகளில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பௌத்த தலங்களை போர் நடைபெற்ற காலத்தில் இருந்து இதுவரையும் பாதுகாத்து பராமரித்து வருவது பாதுகாப்பு படையினர் ஆவர். அவர்களை வழிபாட்டு தலங்களில் இருந்து அப்புறப்படுத்த வேண்டாம்.

அந்த விகாரைகளை உயிர் தியாகம் செய்து பாதுகாத்த பௌத்த பிக்குகள் அந்த பிரதேசங்களுக்கு மிகப் பெரிய பொது சேவை செய்துள்ளனர்.

வறிய மக்கள் பெரும்பாலும் விகாரைகளால் போசிக்கப்பட்டனர். அதற்கான பின்பலத்தை பாதுகாப்பு தரப்பினரே பெற்றுக்கொடுள்ளனர்.

வடக்கு, கிழக்கில் உள்ள விகாரைகளுக்கு அருகில் உள்ள இராணுவ முகாம்கள் அவற்றின் பாதுகாப்புக்காக அப்படி இருப்பது நல்லது.“என மகாநாயக்க தேரர்களால் கூறப்பட்டுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert