Oktober 15, 2024

350 கைதிகளுக்கு விடுதலை

தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு 350 கைதிகளுக்கு ஜனாதிபதியின் விசேட  அரச பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, நாடளாவிய ரீதியில் சிறைச்சாலைகளில் சிறு குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்து வரும் 350 கைதிகளுக்கே இவ்வாறு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமையவே இவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert