Oktober 15, 2024

யேர்மனி டிரெஸ்டனில் உள்ள பாலம் எல்பே ஆற்றில் இடிந்து விழுந்தது!

யேர்மனி டிரெஸ்டன்  நகரத்தில் உள்ள கரோலா பாலத்தின் ஒரு பகுதி இன்று புதன்கிழமை அதிகாலை 3.08 மணியளவில் இடிந்து விழுந்ததாக உள்ளூர்

அதிகாரிகள் தெரிவித்தனர். 

ட்ரெஸ்டன் நகரத்தில் எல்பே ஆற்றைக் கடக்கும் நான்கு பாலங்களில் இந்த பாலம் ஒன்றாகும். மேலும் இந்த சம்பவம் கிழக்கு யேர்மனிய நகரத்தில் பெரும் போக்குவரத்து நெருக்கடிகளை ஏற்படுத்தக்கூடும் கருதப்படுகிறது.

அதிகாலை நேரத்தில் பாலத்தின் மீது யாரும் செல்லவில்லை என்பதால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் முக்கிய நீர்வழிப்பாதையில் கார் மற்றும் கப்பல் போக்குவரத்து இரண்டுமே காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert