Oktober 15, 2024

மக்கள் ஆதரவு பொது வேட்பாளருக்குத்தான்; சுமந்திரன் கருத்தை தூக்கிப்போடுங்கள்!

 இலங்கையில் வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு மக்கள் ஆதரவு உள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

சங்குச் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரனை ஆதரித்து நேற்று யாழ் நகரப்பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார நடவடிக்கையின் போது ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுமந்திரன் அணி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு 

சுமந்திரனைத் தோற்கடித்த சிறிதரன் வெளிநாட்டில் உள்ள நிலையில் சஜித் பிரேமதாஸவுக்கு சுமந்திரன் அணி ஆதரவு அறிவித்தமையை அலட்டிக் கொள்ள தேவையில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

தமிழரசுக் கட்சியின் சிலர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கப் போகிறார்கள் என அண்மையில் அறிவிப்பு வெளியானது. தமிழரசு கட்சியின் முக்கிய நபர்கள் கலந்து கொள்ளாமல் சுமந்திரன் அணி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து வெளியான அறிவிப்பு தொடர்பில் தமிழ் மக்கள் அலட்டிக் கொள்ளத் தேவை இல்லை.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க உள்ள நிலையில் சஜித் பிரேமதாசவுக்கு சுமந்திரன் அணி வாக்களிக்குமாறு கூறியதை தமிழரசு கட்சி கூறியதாக எடுத்துவிட முடியாது என்றும் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert