Oktober 15, 2024

யேர்மனியில் இஸ்ரேலியத் தூதரகத்திற்கு அருகே ஒருவர் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டார்!

யேர்மனியின் முஞ்சன் நகரில் (மூனிச்) அமைந்துள்ள இஸ்ரேலியத் தூதரகத்திற்கு அருகே ஆயுதம் ஏந்திய நபரைக் காவல்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.

யேர்மனியின் தெற்கு நகரமான மூனிச்சில் உள்ள நாஜி ஆவணங்கள் மையம் மற்றும் இஸ்ரேலிய தூதரகம் அருகே ஆயுதம் ஏந்திய ஒருவர் யேர்மன் காவல் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

காவல்துறையினருடனான துப்பாக்கிச் சண்டையின் போது அந்த ஆயுததாரி கொல்லப்பட்டார். இதனை பவேரிய உள்துறை அமைச்சர் ஜோகிம் ஹெர்மன் கூறினார்.

அப்பகுதியில் நீண்ட குழல் உள்ள துப்பாக்கியை ஒரு நபர் எடுத்துச் செல்லப்பட்டதை பார்த்ததாகவும் பின்னர் ஐந்து காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் வேறு சந்தேக நபர்கள் இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஒரு காவல்துறை உலங்குவானூர்தி அப்பகுதியில் வட்டமிட்டது மற்றும் சம்பவத்தின் படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட வேண்டாம் என்று பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert