September 7, 2024

தமிழரசு தனக்கு தானே வேட்டு வைத்துள்ளது

ஒற்றையாட்சியை முன் வைத்துள்ள சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்குமாறு தமிழரசு கட்சி கோரியுள்ளமையானது , அதன் அத்திவாரத்திற்கே வேட்டு வைக்கும் செயல் என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் மூத்த சட்டத்தரணி என். சிறிகாந்தா தெரிவித்துள்ளார். 

யாழ் . ஊடக அமையத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில் 

தமிழினத்தின் சுதந்திரத்தையும் , சுயநிர்ணய உரிமை வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழ் தேசிய கட்டமைப்பாக நாம் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அரியநேந்திரனை களமிறக்கியுள்ளோம். 

தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க , சஜித் பிரேமதாசா , அநுர குமார திஸநாயக்க மற்றும் நாமல் ராஜபக்சே ஆகிய நால்வரும் ஒற்றையாட்சி சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டு அதன் வழி நடப்பவர்கள். 

சஜித் பிரேமதாச ஒற்றையாட்சிக்கு வெளியே சென்று தீர்வு காணுவதாக மூச்சு கூட விடவில்லை. 13ஆம் திருத்தத்தை பற்றி பேசி இருக்கிறார். புதிய அரசியல் யாப்பை ஏற்படுத்தும் வரையில் 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாக கூறியுள்ளார்.

ஆனால் இணைப்பாட்சி பற்றியோ , ஒற்றையாட்சி பற்றியோ எங்கேயும் குறிப்பிடவில்லை. 

இந்த நிலையில் தான் தமிழரசு கட்சியினர் , அவசரமாக கூடி சஜித் பிரேமதாசாவிற்கு வாக்களிப்போம் என கூறியுள்ளனர். 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert