முதலாவது F-16 போர் விமானத்தையும் விமானியையும் இழந்தது உக்ரைன்
ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்த்துப் போராடுவதற்காக மேற்கத்திய நட்பு நாடுகள் வழங்கிய சில F-16 போர் விமானங்களில் ஒன்று ரஷ்யாவின் பெரிய வான்வழித் தாக்குதலை முறியடிக்கும் போது விபத்துக்குள்ளானதுடன் விமானியும் உயிரிழந்தாக உக்ரைன் அறிவித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை உக்ரைனின் தலைநகர் உட்பட பல இடங்களில் ரஷ்யா 200 க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா ட்ரோன்கள் மூலம் மிகப் பொிய தாக்குதல்களை நடத்தியிருந்தது.
விமானம் தரித்து வைக்கப்படும் ஹங்கரில் இருந்து இரண்டு எவ்-16 போர் விமானங்கள் அழிக்கப்பட்டன அல்லது சேதமடைந்தன என்று ரஷ்யா ஏற்கனவே அறிவித்திருந்தது. இது தொடர்பில் உக்ரைன் எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை. அத்துடன் இதுகுறித்த தகவல்களும் உக்ரைனால் மூடிமறைக்கப்பட்டிருந்தது.
ஒரு வாரம் கடந்த நிலையில் அமெரிக்க ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து இத்தகவல் உறுதி செய்யப்பட்டது.
கடந்த திங்கட்கிழமை ரஷ்யா நடத்திய வான்வழித்தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த விமான எதிர்ப்பு ஏவுகணைகளை பயன்படுத்த குறித்த விமானங்கள் பயன்படுத்தப்பட்டன என்று உக்ரைனிய இராணுவம் கூறியது.
விமானங்கள் தங்களின் அடுத்த இலக்கை நெருங்கியதால் எஃப்-16 உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. விமானம் விபத்துக்குள்ளானது. விமானி கொல்லப்பட்டார் என்று உக்ரைனிய இராணுவம் கூறியது.
மூன்ஃபிஷ் என்று குறியீட்டுப் பெயருடன் அழைக்கப்பட்ட ஒலெக்ஸி மெஸ் இறந்துவிட்டதாக தற்போது உறுதி செய்யப்பட்டது.
இந்த விமானத்திற்கு என்ன நடந்தது என்ற விபரங்களை அமெரிக்காவின் பென்டகன் உக்ரைனிடம் கோரியுள்ளது.
லெக்ஸி மெஸ் ரஷ்யத் தாக்குதலில் ஏவப்பட்ட மூன்று ஏவுகணைகளையும் ஒரு ஆளில்லா விமானத்தையும் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைனின் மேற்கத்திய விமானக் கட்டளைப் பிரிவு கூறியது.
மூன்ஃபிஷ் என்ற அழைப்பின் மூலம் அறியப்பட்ட மெஸ், அமெரிக்காவிற்கும் மற்ற நேட்டோ நட்பு நாடுகளுக்கும் F-16 களை அனுப்ப உக்ரைனின் முயற்சிகளின் ஒரு பகுதியாக அமெரிக்காவிற்கு பயணம் செய்தார்.
அமெரிக்கா 2023 இல் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது மற்றும் முதல் விமானம் ஜூலை பிற்பகுதியில் கியிவ் வந்தடைந்தது . பெல்ஜியம், டென்மார்க், நெதர்லாந்து மற்றும் நார்வே ஆகியவை உக்ரைனுக்கு 60க்கும் மேற்பட்ட F-16 விமானங்களை வழங்க உறுதியளித்துள்ளன. எனினும் 6 விமானங்கள் வரையில் உக்ரைக்கு வந்தடைந்ததாக நம்பப்படுகிறது.
உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் திங்கள்கிழமை விபத்து குறித்து விசாரணையைத் தொடங்கியது.
விமானியின் தவறு முதல் இயந்திரக் கோளாறு வரை சாத்தியமான காரணங்கள் ஆராயப்பட்டு வருவதாகவும் விமானியின் தவறு முதல் இயந்திரக் கோளாறு வரை சாத்தியமான காரணங்கள் ஆராயப்பட்டு வருவதாகவும் கூறினார் கூறினார்.
F-16 கள் ஒலியை விட இரண்டு மடங்கு வேகத்தில் பறக்கும் மற்றும் அதிகபட்சமாக 3,200 கிலோமீட்டர்கள் (2,000 மைல்களுக்கு மேல்) பறக்கும். நேட்டோ நாடுகள் பயன்படுத்தும் நவீன ஆயுதங்களையும் இந்த விமானத்தின் மூலம் சுட முடியும்.