September 7, 2024

வவுனியாவில் இறந்த இளைஞனின் மரணத்தில் சந்தேகம்

வவுனியா மகாறம்பைக்குளம் தாஸ்நகர் பகுதியில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட 26 வயதுடைய இளைஞனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் அவரது சடலத்தை உடற்கூற்றாய்வு பரிசோதனைக்கு உட்படுத்துமாறு வவுனியா நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை (02) மாலை தாஸ்நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துக்கொண்ட நிலையில் அயலவர்களால் மீட்கப்பட்டிருந்தார். 

உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவர், ஏற்கெனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த இளைஞனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொலிஸார் சந்தேகம் தெரிவித்ததையடுத்து, சடலத்தை பார்வையிட்ட நீதவான், சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

இளைஞனின் சடலம் வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் நாளைய தினம் (05) உடற்கூற்று பரிசோதனை செய்யப்படவுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert