வைத்தியர் அருச்சுனா விளக்கமறியலில்
மன்னார் பொது வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்தமை உள்ளிட்ட ஏழு குற்றச்சாட்டுகளின் கீழ் வைத்தியர் இராமநாதன் அருச்சுனா கைது செய்யப்பட்டு எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்ர.
மன்னார் பொது வைத்தியசாலைக்குள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு அத்துமீறி நுழைந்து வீடியோ எடுத்தமை, வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியர், பணியாளர்களை அச்சுறுத்தும் விதமாக செயற்பட்டமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் மன்னார் பொது வைத்தியசாலை நிர்வாகத்தினால், மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.