September 16, 2024

இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய விமானப்படைத் தளபதி

இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீஃப் மார்ஷல் விவேக் ராம் சௌத்ரி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு மே 01 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

1982 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் போர் விமானியாக சேர்ந்த ஏர் சீஃப் மார்ஷல் MiG-21, MiG-23MF, MiG-29, Su-30MKI. உள்ளிட்ட பல்வேறு போர் விமானங்களில் 3,800 மணிநேரம் பறந்த அனுபவம் பெற்றவர்.

அதோடு எயார் சீஃப் மார்ஷல் விவேக் ராம் சௌத்ரி பல தகுதிகளுடன் மிகவும் திறமையான நிபுணராகவும் உள்ளார். செப்டம்பர் 30, 2021 முதல், அவர் இந்திய விமானப்படையின் 27வது தலைமைத் தளபதியாகப் பணியாற்றுகிறார்.

இலங்கையில் அவர் தங்கியிருக்கும் காலத்தில், இலங்கை விமானப்படை தளபதி, இலங்கை ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தியோகபூர்வ விஜயம் பிராந்திய விமானப்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துதல், கூட்டுப் பயிற்சி மற்றும் தொழில்நுட்ப அறிவு பரிமாற்றம் பற்றிய விவாதங்களை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கடல்சார் கண்காணிப்பு நடவடிக்கைகளின் விரிவாக்கமும்; விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய தலைப்புகளில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert