Mai 30, 2023

வவுனியா வெடுக்குநாறி மலையிலிருந்து துாக்கி வீசப்பட்ட சிவபெருமான்

வெடுக்குநாறி மலை ஆலயத்தில் இருந்த சகல விக்கிரகங்களும் விசமிகளால் உடைக்கப்பட்டும் பிடுங்கியெறியப்பட்டும் எடுத்துச்செல்லப்பட்டுமுள்ளது…….
உச்சிமலையிலருந்த பீடமும் உடைத்து அழிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் காணப்பட்ட நிலையில் ஊர்மக்கள் குறித்த ஆலயத்திற்கு சென்று பார்த்த போது இச்சம்பவம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
பக்தர்களில் யாரும் ஒருவர் ஆலயவீதிக்குள் உள்நுழைந்தாலே மோப்பம் பிடித்து விசாரணை செய்யும் சிறிலங்கா பொலிசாரினதும் ராணுவப்புலனாய்வாளர்களின் ஆசிர்வாதமும் பங்களிப்புமில்லால் குறித்த மோசமான செயற்பாடு நடந்திருக்கவாய்ப்பில்லை என யாழ் பல்கலைக்கழக முன்னாள்  மாணவதலைவர் எஸ்.தவபாலன் தெரிவித்துள்ளார்..

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert