April 25, 2024

யேர்மனியில் ஓட்டுநர் இல்லத மகிழுந்து அறிமுகம்!!

யேர்மனியை சேர்ந்த வாடகைக் மகிழுந்து நிறுவனம், ஓட்டுநரில்லா மின்சார மகிழுந்துகளை, வாடிக்கையாளரின் வீடுகளுக்கு அனுப்பிவருகிறது.

நவீன தொழில்நுட்பம் மூலம், கட்டுப்பாடு அறையிலிருந்து ஓட்டுநரில்லாமல் இயக்கப்படும் அந்த மகிழுந்தை, வாடிக்கையாளர் தேவைப்படும் இடத்திற்கு ஓட்டிச்சென்று இறங்கிகொள்ளலாம்.

மீண்டும் அந்த தானியங்கி (கார் ரிமோட் கண்ட்ரோல்} மூலம் தானாகத் திரும்பிவிடுகிறது. வே என்ற அந்த ஸ்டார்ட் அப் நிறுவனம், ஐரோப்பிய சாலைகளில் முதல்முதலாக ஓட்டுநரில்லா கார்களை இயக்கியதாகவும், நகர சூழலில், சொந்தமாக மகிழுந்துகளை வைத்துக்கொள்ள விரும்பாதவர்களை மனதில் வைத்து இந்த சேவையை அறிமுகப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளது.

யேர்மனியில், இதுதொடர்பாக நடைபெற்ற கருத்தரங்கிற்கு, ஸ்பெயினிலிருந்து ஓட்டுநரில்லா மின்சார கார் இயக்கிவரப்பட்டது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert