März 28, 2024

சுவிசில் நடைபெற்ற கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி

சுவிசில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற வங்கக்கடலில் வீரகாவியம் படைத்த கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2023!

16.01.1993 அன்று தமிழீழம் நோக்கி எம்.வி அகத் என்னும் கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தவேளை இந்திய அரசின் நயவஞ்சகச் சதியினால் வங்கக்கடலில் தியாக வேள்வித் தீயினில் சங்கமித்து வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 30ஆவது நினைவினை முன்னிட்டு 26வது தடவையாக இளையோர், பெண்கள், வளர்ந்தோர் பிரிவுகளுக்கான உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியானது கடந்த 08.01.2023 ஞாயிறு மற்றும் 14.01.2023 சனி ஆகிய இரு நாட்களும் சூரிச், பேர்ண் மாநிலங்களில் அமைந்துள்ள உள்ளரங்க மைதானங்களில் சிறப்பாக நடைபெற்றது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் விளையாட்டுத்துறையினால் நடாத்தப்பட்ட இச் சுற்றுப்போட்டியானது பொதுச்சுடர்; ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர், மலர்மாலை அணிவிக்கப்பட்டது. அகவணக்கம், மலர்வணக்கத்தினைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகியது

இச் சுற்றுப்போட்டியில் நூற்றுக்கணக்கான போட்டியாளர்களோடு தமிழின உணர்வாளர்களும்இ விளையாட்டு ஆர்வலர்களும்; பங்குபற்றியிருந்தமையோடு, சுற்றுப்போட்டியினை சிறப்பாக நடாத்த தங்களாலான உதவிகளையும் வழங்கியிருந்தனர். இச் சுற்றுப்போட்டிக்கான வெற்றிக்கிண்ணங்கள், சுழல்கிண்ணம் போன்றவற்றினை சுவிஸ் தமிழ் வர்த்தக நிறுவனங்கள், இனஉணர்வாளர்கள்; வழங்கியமையும் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். 

எமது உத்தியோகபூர்வமான இணையத்தளம் ஊடாக போட்டிமுடிவுகளை உடனுக்குடன் நேரஞ்சல் செய்யப்பட்டதுடன்,  இளையோர், பெண்கள் மற்றும் வளர்ந்தோர் போன்ற பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றதுடன் வெற்றி பெற்ற கழகங்களைச் சேர்ந்த வீர, வீராங்கனைகளுக்கான பதக்கங்களும், கேடயங்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து போட்டிகள்; சிறப்பாக நிறைவடைந்தன. 

இவ் விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற அனைத்து வகைகளிலும் முழு ஒத்துழைப்பு நல்கிய அனைத்துக் கழகங்கள், கழக வீரர்கள், கழகப் பொறுப்பாளர்கள், பயிற்சியாளர்கள், ஆர்வலர்கள், ஆதரவாளர்கள், செயற்பாட்டாளர்கள், இனஉணர்வாளர்கள் உள்ளிட்ட அனைத்து எமது உறவுகளுக்கும் பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert