März 28, 2024

நீர்த்துப்போகாது கனவு!

இலங்கை அரசும் அதன் பங்காளிகளான இந்தியா உள்ளிட்ட தரப்புக்களும் முள்ளிவாய்க்காலுடன் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்து விட்டதாக மார்தட்டிக்கொண்டாலும் தமிழ் மக்கள் மனதெங்கும் ஆழ்மனங்களில் உறைந்திருக்கின்ற ஓர்மம் மீண்டுமொருமுறை தமிழீழமெங்கும் ஆர்ப்பரித்திருக்கின்றது.

தன்னெழுச்சியாக தாயகமெங்கும் இன்று மாவீரர்களை நினைவேந்த திரண்ட தேசம் சிங்களத்தின் அடிமைப்படைகளிற்கும் தெற்கு ஆட்சியாளர்களிற்கு கால் கழுவி வயிறு வளர்க்கும் ஒட்டுக்குழக்களையும் அலற வைத்துள்ளது.  

துயிலுமில்லங்களை இடித்தழிப்பதால் மாவீரர்களை நினைவேந்தமுடியாதென்ற சிங்களத்தின் மனோநிலை மீண்டும் பொய்த்துள்ளது.

ஏங்கெங்கும் மாவீரர்கள் தங்களை ஆகுதியாக்கிக்கொண்டார்களோ,எங்கெங்கெல்லாம் மாவீரர்களது பெற்றோர்கள் இருக்கின்றனரோ அங்கெல்லாம் தீபமேற்றி தமிழ் தேசம் அஞ்சலித்துள்ளது.

ஆக்கிரமித்துள்ள துயிலுமில்ல நுழைவாயில்கள் தோறும் தேசிய எழுச்சிப்பாடல்கள் மக்களால் ஒலிக்கவிடப்பட்டு சிங்கள ஆக்கிரமிப்பு படைகளிற்கு மக்களது மனோ நிலை சொல்லப்பட்டுள்ளதாக இவ்வாண்டு அமைந்துள்ளது.

கொல்வதாலோ நல்லிணக்கம் என பேரம் பேசுவதாலோ நீர்த்துப்போக தமிழீழ கனவு ஒன்றும் பகல் கனவல்லவென தேசம் அறைந்து சொல்லியுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert