April 18, 2024

தேசிய ரீதியில் நான்கு பதக்கங்களைப் பெற்று ஓட்டமாவடி தேசிய பாடசாலை வரலாற்றுச்சாதனை!

கொழும்பு, டீ.எஸ்.சேனநாயக்கா கல்லூரி ஏற்பாட்டில் அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற „நின்னாத“ ஊடகம் சார்ந்த மாபெரும் போட்டியில் கோளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி கோட்டத்திற்குட்பட்ட ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) தேசியளவில் பல பாடசாலைகளை வீழ்த்தி நான்கு இடங்களை தனதாக்கிக் கொண்டுள்ளது.இதற்கான மாபெரும் பரிசளிப்பு விழா கடந்த 08-11-2022ம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பு, டீ.எஸ்.சேனநாயக்கா கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. இப்பிரம்மாண்ட நிகழ்வில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களைப் பெற்ற மாணவர்கள் அவ்விடத்தில் அறிவிக்கப்பட்டு அவர்களுக்கான கெளரவமும் வழங்கி வைக்கப்பட்டது.அந்த வகையில், இரண்டு போட்டிகளில் முதலிடம் பெற்று இரண்டு தங்கப்பதக்கங்களையும் மற்றுமொரு போட்டியில் இரண்டாமிடம் பெற்று ஒரு வெள்ளிப்பதக்கத்தையும் மூன்றாமிடமொன்றைப் பெற்று ஒரு வெண்கலப்பதக்கத்தையும் மொத்தமாக நான்கு பதக்கங்களை எமது பாடசாலை தன்வசப்படுத்திக் கொண்டது.தமிழ்மொழி மூலமான சிரேஷ்ட பிரிவு நேர்முக வர்ணனையில் முதலாமிடம் – MFM.ஹாஜித் (தங்கப்பதக்கம்)தமிழ்மொழி மூலமான சிரேஷ்ட பிரிவு விளையாட்டு வர்ணணையில் முதலாமிடம் – MMM.பர்ஷாத் (தங்கப்பதக்கம்)தமிழ்மொழி மூலமான சிரேஷ்ட பிரிவு அறிவிப்பாளர் போட்டியில் இரண்டாமிடம் – FM.றப்கான் (வெள்ளிப்பதக்கம்)தமிழ்மொழி மூலமான சிரேஷ்ட பிரிவு நேர்முக வர்ணணையில் மூன்றாமிடம் – KM.ஷஸ்னூன் (வெண்கலப்பதக்கம்) ஆகியவற்றைச் சுவீகரித்தனர்.அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட இப்போட்டியில் திறமைகளுக்கும் சாதனைகளுக்கும் பெயர் போன இலங்கையினுடைய முன்னணிப் பாடசாலைகள் உட்பட பல நூற்றுக்கணக்கான பாடசாலைகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.இதற்காக மாணவர்களை பாடசாலை ஆசிரியர்களான திரு N.ஹாணு கிருஸ்ணா, திருமதி ஜெஸ்ரின் மபாஸ் ஆகியோர் வழிப்படுத்தியிருந்தனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert