März 28, 2024

முள்ளிவளை துயிலுமில்ல சிரமதானப் பணிகள்: பணியாளர்களுடன் இராணுத்தினர் அச்சுறுத்தல்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தின் சிரமதான பணிகள் மேற்கொள்ள சென்றவர்களை தடுத்து நிறுத்திய இராணுவத்தினர் சிரமதான பணிகள் மேற்கொள்ள முடியாது என்று தடுத்த நிலையில் குறித்த பகுதியில் முறுகல் நிலை ஏற்ப்பட்டது

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தினுடைய சிரமதான பணிகள் கடந்த 13.11.2022 அன்று ஆரம்பிக்கப்பட்டது அன்றையதினம் சிரமதான பணிகள் மேற்கொள்ள இருந்தவர்களை குறித்த துயிலும் இல்லத்தில் இராணுவ முகாம் அமைத்து தங்கியுள்ள 592 ஆவது பிறிகேட் பிறிகேடியர் அவர்கள் சிரமதானம் செய்ய வேண்டாம் என ஏற்ப்பாட்டாளர்களை அழைத்து தெரிவித்திருந்தனர்

இதனை மீறி அன்றைய தினம் சிரமதான பணிகள் மாவீரர்களுக்கு சுடரேற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தது

இதனைத் தொடர்ந்து இன்றைய தினம்(19) குறித்த வளாகத்தை மீண்டும் சிரமதானம் மேற்கொள்வதற்காக மக்கள் அங்கு சென்ற வேளையில் அந்த பகுதியில் வருகை தந்த 592 ஆவது பிறிகேட் இராணுவத்தினர் அந்த சிரமதான பணிகளை தடுத்து நிறுத்தி இருந்தனர்

இதனைத் தொடர்ந்து குறித்த பகுதிக்கு முள்ளியவளை பொலிசார் வருகை தந்து சிரமதான பணிகளை முன்னெடுக்க முடியாது என்று தடுத்து நிறுத்தி இருந்தனர் இதனைத் தொடர்ந்து மக்கள் அவர்களுடன் எதிர்த்து வாக்குவாதப்பட்டு  தாங்கள் சிரமதானத்தை செய்வோம் என்று விடாப்படியாக நின்ற நிலைமையில் அவர்கள் கலைந்து சென்ற நிலையில் தற்போது சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

குறித்த பகுதிக்கு வருகை தந்த இராணுவத்தினர் பாரிய வீடியோ கமராக்களை கொண்டு வந்து மக்களை தனித்தனியே வீடியோ பதிவு செய்து அச்சுறுத்தும் வகையில் செய்யப்பட்டிருந்தனர்

தொடர்ந்து இராணுவ முகாமில் இருந்து சிரமதானம் செய்பவர்களை வீடியோ பதிவு செய்யும் நடவடிக்கைகளை இராணுவ சிப்பாய்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தனர்

மக்கள் அவர்களை வீடியோ பதிவு செய்ய வேண்டாம் என தெரிவித்த நிலையில் தங்களுடைய பெயர் பதவிகளுக்கான அடையாளங்களை அகற்றிவிட்டு மக்கள் அவர்களை அடையாளம் காண முடியாத வகையில் வீடியோ பதிவு செய்து அச்சுறுத்தல் விடுத்துவருகின்றனர் 

தற்போதும் மக்கள் சிரமதான பணியை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்தி: ஜெகதீஸ்வரன்  பிரஷாந்த் 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert