März 28, 2024

இன்று ஆரம்பமாகும் மாவீரர் நினைவு சுமந்த திறனறிதல் போட்டிகள்!

பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தினால் மூன்றாவது ஆண்டாக நாளையும் மறுதினமும் (சனி,ஞாயிறு)

நவம்பர் 12 ஆம் 13 ஆம் நாட்களில் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

தாயக வரலாற்றுத் திறனறிதலுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்!

1) திறனறிதலில் அகவை வேறுபாடின்றி அனைவரும் பங்குகொள்ள முடியும்.

2) ஒருவர் *ஒரு தடவை * மட்டுமே திறனறிதலைச் செய்யலாம்.

3) குறிக்கப்பட்ட நேரமே வழங்கப்பட்டுள்ளதால் அதற்குள் திறனறிதலை செய்து முடிக்கவேண்டும்.

4) நேரம் கடந்து முடிக்கப்படுமிடத்து சான்றிதழ்கள் மின்னஞ்சலில் கிடைக்கப்பெற மாட்டாது.

5) தமிழிலும் ஆங்கிலத்திலும் சரியான முறையில் தமது பெயர்களை குறிப்பிட வேண்டும்.

6) தமது பெயர்கள் பிழையாக குறிப்பிட்டிருப்பின் அவ்வாறே சான்றிதழ்களும் கிடைக்கப்பெறும் என்பதோடு மாற்றம் செய்யமுடியாது என்பதை கவனத்திற் கொள்க.

7) Icloud மின்னஞ்சல் முகவரிகள் தவிர்க்கவும்.

8) *கணினி, வரைபட்டிகை (tablette).திறன்பேசிகளில் (Smartphone) * மட்டுமே திறனறிதலைச் செய்ய வேண்டும்.

காலச்சூழல்களே மாந்தர்களின் இயங்குநிலையையும் இருப்பையும் தீர்மானிக்கின்றது. உலகின் *அரசியல், பொருண்மிய, வணிக, அறிவியல் தொழில்நுட்பத் * தரவுகளும் எமது வாழ்வியலில் உள்ளடங்கியிருக்கின்றது.

உலகளாவிய தமிழர்களின் வரலாறு தொடரவேண்டுமானால் எமது கடந்தகால வரலாற்றினையும் கற்க வேண்டிய தேவையுள்ளது. இதற்காகவே வரலாற்றுத் திறனறிதல் இணையவழியூடாக நடாத்தப்படுகின்றது.

இந்த தொலைநோக்கைப் புரிதலாக்கிக்கொண்டு அதில் பங்குகொண்டு வரலாற்றறிவூடு எமது விடுதலையை விரைவாக்குவோம்.

திறனறிதல் நடைபெறும் நாட்களில் திறனறிதலுக்கான இணைய இணைப்பு இணையத்தில் வெளியிடப்படும்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert