April 19, 2024

எல்லாமே சும்மா:பாண் விலை குறையாது!

இலங்கையில் பேக்கரி உற்பத்திகளுக்கு அவசியமான வேறு மூலப்பொருட்களின் விலை குறைவடையாமையால், பாண் இறாத்தலின் விலையைக் குறைக்க முடியாது என தென் மாகாண சிறு மற்றும் நடுத்தர அளவிலான வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

31ஆம் திகதி முதல், 450 கிராம் பாண் இறாத்தலின் விலையை 10 ரூபாவால் குறைக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் நடவடிக்கை எடுத்தது.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், தென் மாகாண சிறு மற்றும் நடுத்தர அளவிலான வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கமல் பெரேரா, இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

புறக்கோட்டை மொத்த சந்தையில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 250 ரூபாவாக உள்ளபோதிலும், கொழும்பிற்கு வெளியே உள்ள இடங்களில் அந்த விலைக்கு கோதுமை மா விற்பனை செய்யப்படுவதில்லை

கோதுமை மாவையும், தண்ணீரையும் மாத்திரம் கொண்டு பாண் இறாத்தலை உற்பத்தி செய்ய முடியாது. ஏனைய உள்ளீட்டுப் பொருட்களின் விலைகள் குறைவடையவில்லை.

இந்த நிலையில், பேக்கரிகளுக்கு, பாண் இறாத்தலின் எடையையும், விலையையும் நிர்ணயிப்பதுடன், கோதுமை மாவுக்கு நிர்ணய விலையை அறிவிக்குமாறும் தென் மாகாண சிறு மற்றும் நடுத்தர அளவிலான பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கமல் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert