März 29, 2024

துருக்கியில் சுரங்க வெடி விபத்து 40 பேர் பலி!!

வடக்கு துருக்கியில் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்தனர், அதே நேரத்தில் சுரங்கத்தில் சிக்கியிருந்த டஜன் கணக்கானவர்களை மீட்பவர்கள் மேற்பரப்பிற்கு கொண்டு வர முயன்றனர்.

கருங்கடல் கரையோர மாகாணமான பார்ட்டினில் உள்ள அமாஸ்ரா நகரில் உள்ள அரசுக்கு சொந்தமான ரிரிகே அமஸ்ரா மியூசிஸ் முதுர்லுகு சுரங்கத்தில் நேற்று வெள்ளிக்கிழமை வெடிப்பு ஏற்பட்டது.

மீட்புப் பணியை ஒருங்கிணைக்க அமஸ்ராவுக்குச் சென்ற உள்துறை அமைச்சர் சுலைமான் சோய்லு, இன்று சனிக்கிழமையன்று 40 சுரங்கத் தொழிலாளர்கள் இறந்ததை உறுதி செய்தார்

11 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், மேலும் 58 பேர் சுரங்கத்தில் இருந்து தாங்களாகவே வெளியேறினர். அல்லது காயமின்றி மீட்கப்பட்டனர். மீதமுள்ள ஒரு சுரங்கத் தொழிலாளியின் நிலை தெளிவாக இல்லை.

எரிசக்தி அமைச்சர் Fatih Donmez, வெடிப்புக்குப் பிறகு அமாஸ்ராவுக்குச் சென்றவர். நிலக்கரிச் சுரங்கங்களில் காணப்படும் எரியக்கூடிய வாயுக்கள் கொள்கலனால் வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட மதிப்பீட்டில் சுட்டிக்காட்டினார்.

துருக்கியின் பேரிடர் மேலாண்மை நிறுவனமான AFAD, அண்டை மாகாணங்கள் உட்பட பல மீட்புக் குழுக்கள் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டன.

துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன், தனது மற்ற ஏற்பாடுகள் அனைத்தையும் இரத்து செய்துவிட்டு சனிக்கிழமை விமானம் மூலம் விபத்து நடந்த இடத்திற்குச் செல்வதாகக் கூறினார்.

உயிர் இழப்பு மேலும் அதிகரிக்காது, எங்கள் சுரங்கத் தொழிலாளர்கள் உயிருடன் காணப்படுவார்கள் என்பது எங்கள் நம்பிக்கை என்று எர்டோகன் ஒரு ட்வீட்டில் கூறினார்.

இந்த வெடிப்பு சுரங்கத்தின் நுழைவாயிலுக்கு கீழே 300 மீட்டர் (985 அடி) 15:15 GMT அளவில் நிகழ்ந்ததாக பார்டின் கவர்னர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert