April 20, 2024

சார்ஜர் இல்லாமல் ஐபோன் விற்பனை: ஆப்பிள் நிறுவனத்திற்கு 19 மில்லியன் டொலர்கள் அபராதம்!!

சார்ஜர் இல்லாமல் ஐஃபோனை விற்பனை செய்த ஆப்பிள் நிறுவனத்திற்கு 19 மில்லியன் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் தனக்கென தனி முத்திரையுடன் இயங்கிக்கொண்டிருக்கிறது ஆப்பிள் நிறுவனம்

புதிதாக எந்த ஸ்மார்ட்ஃபோன்கள் சந்தைக்கு வந்தாலும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன்களுக்கென உலகளவில் கவனம் உண்டு.

இருந்தாலும் ஆப்பிள் நிறுவனம் சில காலமாக சார்ஜர் வழங்கமால் தன் ஐபோன்களை விற்பனை செய்து வருகிறது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் மின்னணு கழிவுகளைக் கட்டுப்படுத்துவதற்காக சார்ஜர் அடாப்டரை ஐஃபோனுடன் விற்காமல் இருக்கிறோம் என ஆப்பிள் நிறுவனம் கூறிவருகிறது.

இந்நிலையில், பிரேசில் நாட்டில் சார்ஜர் இல்லாமல் ஐஃபோனை விற்பனை செய்ய ஆப்பிள் நிறுவனத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஆனால்,  தடை மீறி சார்ஜர் இல்லாமல் ஐஃபோன் 13-யை ஆப்பிள் நிறுவனம் அந்நாட்டில் விற்பனை செய்துள்ளது. இதனால், பிரேசில் சிவில் நீதிமன்றம் தடையை மீறியதற்காக ஆப்பிள் நிறுவனத்திற்கு 19 மில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளது. மேலும், பிரேசிலில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐஃபோன் 12, ஐஃபோன் 13 ரகங்களை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு சார்ஜர் வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert