April 20, 2024

விதைக்கப்பட்டது செந்தாழனின் உடல்!

தமிழீழம் வளலாய் அச்சுவேலி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குலசிங்கம் செல்வகுமார் (செந்தாழன்) அவர்கள் கடந்த 20.08.2022அன்று சுகயீனம் காரணமாக பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரில் சாவடைந்தார்.

சாவடைந்த  செந்தாழன் அவர்கள் தாயகத்தில் மணிவண்ணன் பயிற்சிப் பாசறை, ஜொனி அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி, பட்டய அறிவியற் கல்லூரி, அனைத்துலகத் தொடர்பகம், கேணல் கிட்டு அரசறிவியற் கல்லூரி போன்றபல பகுதிகளில் பயிற்சி பெற்று, 2006ம் ஆண்டு ரஷ்ய மொழி ஆற்றும் அரசறிவியல் படிப்பதற்காக ரஷ்யாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். 2009ம் ஆண்டு வரை ரஷ்யாவில் தனது பணியை மேற்கொண்டு வந்தார்.

புலம் பெயர்ந்து பிரான்ஸ் நாட்டிற்கு வந்த செந்தாழன் அவர்கள் பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரில் கடந்த 12 வருடங்களாக வாழ்ந்து. தாய் நாட்டிற்காகவும் கடமை செய்து வந்ததுடன் பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகர் வாழ் மக்களுடனும் அன்பைப் பேணி வந்துள்ளார்.

ஈகைச்சுடர் ஏற்றல், அகவணக்கம், மலர்வணக்கத்தைத் தொடர்ந்து பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு பரப்புரைப் பொறுப்பாளர் திரு. மேத்தா அவர்கள் உரையாற்றியிருந்தார். அத்துடன் சக போராளிகளும் நினைவுரையை ஆற்றியிருந்தனர்.

செந்தாழன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு ஸ்ராஸ்பூர்க் வாழ் மக்களின் கண்ணீரால் நிறைந்திருந்தது.

இவரது வித்துடல் 26.09.2022 அன்று Cimetiére Nord, 15 RUE DE L’ILL ,67000 STRASBOURG (ROBERTSAU) துயிலும் இல்லத்தில் தேசிய கொடி போர்த்தி விதைக்கப்பட்டது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert