April 20, 2024

இழுத்து இழுத்து ஓடும் சிறீலங்கன் எயர்லைன்ஸ்

முன்னாள் வடக்கு ஆளுநரும்  இராணுவத்தின் ஓய்வு பெற்ற அதிகாரியுமான சந்திரசிறீயின் கீழுள்ள  ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் நட்டத்தை பதிவு செய்துள்ளது.

மத்தள சர்வதேச விமான நிலையம் மாதாந்தம் 100 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தி வருவதாக சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்

ஒரு முதலீட்டாளர் அங்கு முதலீடு செய்ய விரும்பினால் அரசாங்கம் பரிசீலிக்கும் என்றும் அவர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

கொரோனா தொற்று, நாடு முழுவதும் பரவி வரும் போராட்டங்கள் போன்ற காரணங்களால் விமானப் போக்குவரத்தில் குறைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இரத்மலானை மற்றும் பலாலி விமான நிலையங்கள் திட்டமிட்டபடி முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

பலாலி விமான நிலையத்தில் பல விமான நிறுவனங்கள் தமது சேவைகளை இயக்குவதாக உறுதியளித்த போதிலும் ஒரு விமானம் கூட அங்கு வரவில்லை. ஏர் இந்தியாவும் தங்கள் சேவைகளை இயக்க ஒப்புக்கொண்டது. ஆனால் அது நடக்கவில்லை. மாலைதீவில் உள்ள விமான சேவை நிறுவனத்துடன் இரத்மலானை விமான நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் தோல்வியடைந்துள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனமும் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் நட்டத்தை பதிவு செய்துள்ளதாகவும், அதன் மறுசீரமைப்புக்கான அமைச்சரவைப் பத்திரம் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமில்லாத 23 விமானங்களும் வரி அடிப்படையில் கையகப்படுத்தப்பட்டவை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert