April 23, 2024

இலங்கை:அரச ஊழியர்களிற்கு சம்பளமில்லை!

இலங்கையில் அரச ஊழியர்களுக்குரிய வேதனத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நேற்று அமைச்சர் பந்துல குணவர்தன சபையில் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பப்பட்டது.

அத்துடன், சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்பட்ட இணக்கத்தின் பிரகாரம் பணத்தை அச்சிடமுடியாது என்று தெரிவித்திருந்தீர்கள். நாம் வினவியபோது, சர்வதேச நாணய நிதியத்துடன் எந்த உடன்படிக்கையும் இல்லை. வெளிப்படுத்த ஒன்றும் இல்லை என்றீர்கள்.

இந்த முன்னுக்குபின் முரணான விடயம் தொடர்பில் விளக்கமளிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட கோரினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் பந்துல குணவர்தன, இலங்கை அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 16 தடவைகள் கடன் பெற்றுள்ளது.

அத்துடன், அரசாங்கம் ஒரு போதும் அரச ஊழியர்களுக்கு வேதனம் வழங்குவதை தவிர்க்காது.

இக்கட்டான சந்தர்ப்பங்களில் வேறு செலவுகளை குறைத்து, அதனூடாக வேதனங்கள் வழங்கப்படும்.

தற்போது, பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது அதற்குரிய கொடுப்பனவுகள், ஊடாகவும் மூலதன செலவுகளை குறைத்தும் அரச பணியாளர்களுக்கு வேதனம் வழங்கப்படுகிறது. இவ்வாறு நிதி முகாமைத்துவம் செய்யப்படுகிறது. இது தற்போதைய நெருக்கடி என்றார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert